ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

கலித்தொகை - மருதக் கலி 93

ADVERTISEMENTS

வண்டு ஊது சாந்தம் வடுக் கொள நீவிய,
தண்டாத் தீம் சாயற் பரத்தை, வியல் மார்ப!
பண்டு, இன்னை அல்லைமன்; ஈங்கு எல்லி வந்தீய,
கண்டது எவன்? மற்று உரை;
நன்றும் தடைஇய மென் தோளாய்! கேட்டீவாயாயின்
5
ADVERTISEMENTS

உடன் உறை வாழ்க்கைக்கு உதவி உறையும்
கடவுளர்கண் தங்கினேன்;
சோலை மலர் வேய்ந்த மான் பிணை அன்னார் பலர், நீ
கடவுண்மை கொண்டு ஒழுகுவார்;
அவருள், எக் கடவுள்? மற்று அக் கடவுளைச் செப்பீமன்
10
ADVERTISEMENTS

'முத்து ஏர் முறுவலாய்! நாம் மணம் புக்கக்கால்,
"இப் போழ்து போழ்து" என்று அது வாய்ப்பக் கூறிய
அக் கடவுள், மற்று அக் கடவுள் ' 'அது ஒக்கும்
நா உள் அழுந்து தலை சாய்த்து நீ கூறும்;
மாயமோ; கைப்படுக்கப் பட்டாய் நீ; கண்டாரை
15

வாயாக யாம் கூற வேட்டீவாய்! கேள், இனி;
பெறல் நசை வேட்கையின் நின் குறி வாய்ப்பப்
பறி முறை நேர்ந்த நகாராக, கண்டார்க்கு
இறு முறை செய்யும் உருவொடு, நும் இல்,
செறி முறை வந்த கடவுளைக் கண்டாயோ;
20

நறுந் தண் தகரமும் நானமும் நாறும்
நெறிந்த குரல் கூந்தல் நாள் அணிக்கு ஒப்ப,
நோக்கின் பிணி கொள்ளும் கண்ணொடு, மேல் நாள், நீ
பூப் பலி விட்ட கடவுளைக் கண்டாயோ;
ஈர் அணிக்கு ஏற்ற ஒடியாப் படிவத்துச்
25

சூர் கொன்ற செவ்வேலாற் பாடி, பல நாளும்,
ஆராக் கனை காமம் குன்றத்து நின்னொடு
மாரி இறுத்த கடவுளைக் கண்டாயோ;
கண்ட கடவுளர்தம்முளும், நின்னை
வெறி கொள் வியன் மார்பு வேறாகச் செய்து,
30

குறி கொளச் செய்தார் யார்? செப்பு: மற்று யாரும்
சிறு வரைத் தங்கின் வெகுள்வர்; செறு தக்காய்!
தேறினேன்; சென்றீ நீ செல்லா விடுவாயேல்,
நல் தார் அகலத்துக்கு ஓர் சார மேவிய
நெட்டிருங் கூந்தற் கடவுளர் எல்லார்க்கும்
35

முட்டுப்பாடு ஆகலும் உண்டு.